நடிகையும் பாஜக பிரமுகர்மான ரஞ்சனா நாச்சியார் மாணவர்களை அடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கிய படியும் பேருந்தின் கூரை மீது ஏறி நின்றபடியும் மாணவர்கள் பயணம் செய்தனர். இதனை பார்த்த ரஞ்சனா, தான் போலீஸ் என்று கூறி மாணவர்களை கீழே இறக்கி அடித்து விரட்டினார். இந்த வீடியோ வைரலான நிலையில் அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.