விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்கலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் கூற முடியாது. ரஜினியை இப்படிதான் அரசியலுக்கு வருகிறார் என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர் வரவில்லை என்று கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.