மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவியான லீலாவதி, உடல்நலக்குறைவால் சில நாட்களாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல்வேறு மருத்துவ நடவடிக்கைகளும் எடுத்தபோதிலும், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 31) காலை காலமானார் என்ற தகவல் கட்சித் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருடன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.