சென்னையில் நாளை செப்டம்பர் 1 முதல் டீ, காஃபி விலை உயரப்போகிறது என்று டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பால் விலையும் டீ, காஃபி தூள் விலையும் தொடர்ந்து உயர்ந்துவரும் காரணத்தால், வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படுவதால் விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலைக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில், தற்போது ரூ.12க்குக் கிடைக்கும் டீ, நாளை முதல் ரூ.15 ஆகவும், ரூ.15க்குக் கிடைக்கும் காஃபி ரூ.20 ஆகவும் விலை உயர்கிறது.

3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் விலை அதிகரிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் டீ கடை வியாபாரிகள் அனைவரும் ஏற்க வேண்டிய கட்டாய நிலையாக உருவாகியுள்ளதால், பொதுமக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.