தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 5-ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்றைய தினம் எந்தக் கடையும் இயங்காது என்றும், அந்த நாளில் மதுபாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக விடுமுறை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.