தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழக வரலாற்றில் முதல்முறையாக திராவிட கட்சிகளுக்கு சவால்விடும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

அந்த கட்சியினர் பல தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் தற்போது மயிலாப்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி வாகை சூடியுள்ளார்.