குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் மேல்முறையீடு செய்ய அரசு தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி வேண்டுகோளை ஏற்று எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நடத்துகின்றனர்.

முதல் கட்டமாக புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. உரிமைத்தொகை பெறாத பெண்களுக்கு இலவசமாக மேல்முறையீடு விண்ணப்பம் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மற்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.