பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சதால் சுமார் 5,000 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட உள்ள நிலையில் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னேச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் காச்சல் பாதிப்பு ஏற்பட்டால் தாமாக மருந்து உட்கொள்ளாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.