சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரண்டு தினங்களாக குறைந்த நிலையில் இன்றும் விலை 720 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,13,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் ஒரு கிராம் 15,523 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,184 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
