
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறையை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன், உயர்கல்வித்துறையை கூடுதலாக கவனிப்பார்.