கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நடந்த சோககரமான விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது, வேகமாக சென்ற லாரி பின்புறம் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரும் ஹெல்மட் அணியவில்லை என்று கூறப்படுகிறது.
உடனடியாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மாணவர்களின் உடல்களை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இச்சம்பவம் மாணவர்களின் குடும்பங்களிலும், உள்ளூர் மக்களிடமும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
