நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதும், அதனை எதிர்க்கட்சிகள் கொண்டாடியதும் தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மசோதா நிறைவேற்றப்படாததற்காக நாட்டின் பெண்களிடம் பிரதமர் மன்னிப்புக் கோரினார். பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு பொன்னான வாய்ப்பு தடம் புரண்டுவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
பெண்களுக்கான அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக இருந்ததாகச் சாடினார். பெண்களின் கனவுகளை எதிர்க்கட்சிகள் தகர்த்துவிட்டதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இந்த மசோதா தோல்வியடைந்ததற்கு எதிர்க்கட்சிகளின் குறுகிய கால அரசியலே காரணம் என்றும், இதற்கான விலையை அவர்கள் வரும் காலத்தில் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
