பிரபல பெங்காலி நடிகரும் பாஜக மூத்த தலைவருமான ஜாய் பானர்ஜி (வயது 62) இன்று (ஆகஸ்ட் 25) காலமானார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட காலமாக சுவாச கோளாறு மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 15ம் தேதிக்கு பின் உடல்நிலை மிக மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளுக்கு பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மேற்குவங்க பாஜகவில் முக்கிய முகமாக செயல்பட்ட ஜாய் பானர்ஜி, அதன் பின்னரும் மாநிலக் குழுவில் உறுப்பினராக இருந்து வந்தார். அவரது மறைவு மேற்கு வங்க அரசியல் மற்றும் சினிமா உலகில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
