உலகின் முதல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன்தான் முதலாவது விண்வெளிக்கு சென்றவர் என பாஜக எம்.பி. அனுராக் தாகூர் பள்ளி மாணவர்கள் மத்தியில் தெரிவித்ததையே தொடர்ந்து பல தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து,பதிவிட்டார், முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல, பாஜக வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம். என்று கூறியுள்ளார்.
முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,
பாஜக வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல்… pic.twitter.com/iZdTo0Y0Bc
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 25, 2025
“>
