71 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக பார்க்கிங் தேர்வாகியுள்ளது.
அதன்பிறகு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற உள்ளொழுக்கு என்ற திரைப்படத்திற்காக பிரபல தமிழ் நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சிறந்த மலையாள விருது என்ற பிரிவிலும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதினை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ். பாஸ்கர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
