கேரள பெண்களை மையப்படுத்தி தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்ததோடு படத்தின் தலைப்புக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த திரைப்படத்தில் இந்து பெண்களை முஸ்லிம் பெண்களாக மாற்றி தீவிரவாத அமைப்பில் சேர்ப்பது போன்று இருந்ததால் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகள் கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
