சென்னையில் பெய்துவரும் மழையில் தனது வீட்டிற்குள்ளும் நீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷால் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். “மழைநீர் வடிகால் பணிகளை எங்கே ஆரம்பித்தார்கள், எங்கே முடித்தார்கள் என தெரியவில்லை. 24 மணி நேரமாக மின்சாரம் இல்லை. எனது வீட்டில் உள்ள வயதானவர்கள் பயத்துடன் உள்ளார்கள். சென்னை MLAக்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.