தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைப் பாதிக்கும் மேகதாது அணை விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் மிக அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மேகதாது திட்ட முன்மொழிவின் விரிவான அறிக்கையை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.

காவேரி ஆற்றுப் படுகையின் கீழ்மடடப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் முறையான ஒப்புதலைப் பெறாமல், கர்நாடக அரசு தன்னிச்சையாக எந்தவொரு புதிய திட்டத்தையும் சட்டவிரோதமாக மேற்கொள்ளக் கூடாது என்று அம்மாநில அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் மிக ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.

எல்லையோர நீர் உரிமைகளைக் காக்க முதல்வர் விஜய் நேரடியாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதி கர்நாடகாவுக்கு செக் வைத்துள்ள இந்தச் சம்பவம், தற்போது இரு மாநில அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.