பாமக கட்சியின் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் இருவரும் தனித்தனியாக செயல்படுகின்றனர். கட்சியின் செயல் தலைவராக அன்புமணியை நியமித்த ராமதாஸ் பின்னர் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவராக ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் நியமிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் கட்சியில் ராமதாஸ் தனித்தனியாக பொறுப்பாளர்களின் நியமித்து வரும் நிலையில் தற்போது ஜிகே மணியின் மகனுக்கு புதிய பொறுப்பு வழங்கியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.