பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சித் தலைமையில் நீடித்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ஜி. கே. மணியின் மகன் தமிழ் குமரனை பாமகவின் மாநில இளைஞரணி தலைவராக நியமித்தார்.

அதற்கான உத்தரவை ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி தமிழ் குமரனிடம் வழங்கினார். இந்த நியமனம் பாமக கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அன்புமணி தலைமையில் இளைஞரணி நடவடிக்கைகள் நடைபெற்று வந்த நிலையில், புதிய நியமனம் எந்த திசையில் அரசியல் நிலையை மாற்றும் என்பது கட்சி வட்டாரத்தில் கேள்விக்குறியாகியுள்ளது.