பாமக கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அன்புமணியை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு ராமதாஸ் கட்சியில் புதிய பொறுப்பாளர்களை நியமித்து வரும் நிலையில் தற்போது முனிராஜ் என்பவரை பாமக மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவராக நியமித்துள்ளார்.

கடந்த 23ஆம் தேதி அவரை சொத்து பாதுகாப்பு குழு தலைவராக ராமதாஸ் நியமித்த நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை நேரில் சந்தித்த முனிராஜ் அவரிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் அவருக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து சொந்த ஊரான ஓசுருக்கு சென்ற அவருக்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.