பாகிஸ்தானில் மர்ம நபர்களால் முக்கிய மதகுரு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து பாகிஸ்தான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதகுரு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.