கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு மரக்கும்பி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிறார்களை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்டனை அறிவிப்பை கேட்டு ஆயுள் தண்டனை கைதி அதிர்ச்சியில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.