அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் அர்ஜுனன். இவருக்கு சேலத்தில் சாலை அமைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின் போது திடீரென அர்ஜுனன் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்து விட்டார்.
சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் சாலை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கடும் வாக்குவாதம்.. வாக்குவாதத்தின் போது பெண்ணை தாக்கியதால் பெரும் பரபரப்பு..!#Salem #AIADMK #ExMLA #TamilNaduPolitics #AIADMKNews #SalemNews #PoliticalNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/ZjlnCBkk7Y
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) December 4, 2025
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் எப்படி ஒரு பெண்ணை கன்னத்தில் அடிக்கலாம் என அங்கிருந்தவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
