தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது உறவினரை அழைத்துச் சென்று, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அங்கு பணியாற்றும் பள்ளித் தோழி டாக்டர் சுபாஷினியுடன் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், சுபாஷினியின் தம்பியான சுர்ஜித், கவினை வெளியில் அழைத்துச் சென்று வாளால் தாக்கிகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த வழக்கில் அந்த பெண்ணின் தந்தை சரவணன், சகோதரர் சுர்ஜித் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஜெயபாலையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
