மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜ திலகா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் திடீரென குமரவேல் மயங்கி விழுந்ததால் அவரை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குமரவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது குமரவேலின் தாய் கோவிந்தம்மாள் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

திடீரென கோவிந்தம்மாள் தனது மகனின் உடல் மீது மயங்கி விழுந்து உயிரிழந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தாய் மற்றும் மகனுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று இரண்டு உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.