சென்னை மாவட்டம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(57). இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி சேகர் இரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 19 வயதுடைய திருநங்கையான ஜெசிகா என்பவர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது சேகர் ஜெசிகாவுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜெசிகா சேகரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதனால் சேகரின் பின் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சேகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.