நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகும் என மாணவர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) தற்போது ஒரு அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது.

மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்வுக்குத் தயாராகி வரும் லட்சக்கணக்கான மாணவர்கள் இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யக் காத்திருந்தனர். ஆனால், சில  காரணங்களால் ஹால் டிக்கெட் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று வெளியாக வேண்டிய ஹால் டிக்கெட் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நெருங்கி வரும் சூழலில் இந்தத் திடீர் தாமதம் மாணவர்களிடையே சற்றுப் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், நாளை காலைக்குள் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்ற தகவல் அவர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.