தமிழக அரசியலின் ‘ஹாட் டாபிக்’கான அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கப்போகிறதா என்ற கேள்வி தற்போது டெல்லி முதல் சென்னை வரை தீயாய் பரவி வருகிறது.

கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து விலகிய அண்ணாமலை, தற்போது நடைபெற்று வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் இடம் பெறாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் வரும் ஜூன் 21-ம் தேதியுடன் காலியாகும் 4 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் (TDP), ஜனசேனா ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி, பாஜகவுக்கு ஒதுக்கப்படும் ஒரு இடத்தில் அண்ணாமலை களம் காண உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி விரைவில் மேற்கொள்ள உள்ள மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அண்ணாமலைக்கு முக்கியத் துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலமாகவே அவர் தேசிய அரசியலில் ஒரு ‘மெகா’ இன்னிங்ஸைத் தொடங்க உள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.