தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கோவையில், ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பலத்த அடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியின் 77-வது வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமி, 91-வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் தொண்டாமுத்தூர் ரவியின் நெருங்கிய உறவினரான கருணாநிதி ஆகியோர் திமுகவிலிருந்து அதிரடியாக விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
குறிப்பாக, “திமுகவில் சீனியர்களுக்கு மதிப்பில்லை, உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை” என ராஜலட்சுமி பகிரங்கமாகப் புகார் தெரிவித்துவிட்டு வெளியேறியிருப்பது திமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் கோட்டையாகக் கருதப்படும் கோவையில் அரங்கேறி வரும் இந்த “ரிவர்ஸ் கியர்” அரசியல் மாற்றம், அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தையும், திமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
