சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த பிரபல பின்னணி பாடகி கெனிஷா பிரான்சிஸ், தற்போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நான் சொல்ல வேண்டியதை விட அதிகமாகவே பேசிவிட்டேன். இந்த விவகாரத்தில் மிகுந்த அன்புடன் நுழைந்தேன், ஆனால் இப்போது மிகுந்த அமைதியுடன் இதிலிருந்து வெளியேறுகிறேன். அகங்காரம், தீர்ப்பு மற்றும் ஜோடிக்கப்பட்ட கதைகள் நிறைந்த இடங்களில் நற்பண்புகளுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
“தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு இடத்தில் எனது நற்பண்புகளை நிரூபிக்க நான் இனி முயலப்போவதில்லை. குழப்பங்களுக்கு எதிராகக் கருணை காட்ட இங்கே வழியில்லை. நான் இப்போது சென்னையை விட்டு வெளியேறிவிட்டேன். எனது இசை, சிகிச்சை மற்றும் இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை என அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டுச் செல்கிறேன்.
ஆன்லைன் விமர்சனங்கள், சூழ்ச்சிகள் மற்றும் இணையவழி துன்புறுத்தல்களால் நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். எனவே, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள கணக்குகளிலிருந்தும் நான் தற்காலிகமாக விலகுகிறேன். கடவுள் வெற்றி பெறும் வரை நான் அமைதியாக இருக்கப் போகிறேன். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்குத் தேவையான தனிமையை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “பெண்ணியம் வெற்றி பெற்றது, மகிழ்ச்சி தோற்றுப்போனது” என்ற வாசகத்துடன் அவர் தனது பதிவை முடித்துள்ளார். மேலும் நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையே விவாகரத்து வழக்கு நடைபெறும் நிலையில் ஆர்த்தி ரவி தொடர்பாக அவதூறு பரப்ப கெனிஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அவரை பலரும் விமர்சித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் வீடியோ மூலம் சிறுவயதிலேயே தனக்கு திருமணமாகி அம்மா அப்பாவை இழந்து கரு சிதைதல் உண்டாகி பல வேதனைகளை அனுபவித்ததாகவும் இப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த நான் இன்னொருவர் குடும்பத்தை கெடுப்பேனா ரவிமோகன் தெரபிக்காக மட்டுமே என்னிடம் வந்தார் அவர் ஒன்றும் குழந்தை கிடையாது என்று கெனிஷா விளக்கம் கொடுத்தார். மேலும் இந்த நிலையில் தற்போது சோசியல் மீடியாவை விட்டும் சென்னையை விட்டு வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
View this post on Instagram
