பாலிவுட் திரையுலகிலும், சின்னத்திரையில் ‘நாகினி’ சீரியல் மூலமும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை மௌனி ராய், தனது கணவர் சூரஜ் நம்பியாரை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாகவே இவர்களது மணவாழ்க்கை குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகாரப்பூர்வ அறிக்கையை மௌனி ராய் வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடகங்கள் காட்டும் அதீத தலையீடுகள் வருத்தமளிப்பதாகவும், இருவரும் பரஸ்பரம் பேசி இந்த விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, சில ஆண்டுகளிலேயே பிரிவதாக அறிவித்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
