நடிகை த்ரிஷா வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பின் பேரில், உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாய்கள் மற்றும் குண்டு நீக்குப் படையினரின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். த்ரிஷா வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் போலீசார் கடும் கண்காணிப்பை மேற்கொண்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

மிரட்டல் அழைப்பை அடுத்து, நடிகை த்ரிஷா வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மர்ம நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதுடன், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.