சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி விஜய் தலைமையில் லியோ திரைப்பட வெற்றி விழா நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தயாரிப்பு நிறுவனத்துடன் காவல்துறை உறுதியளித்துள்ளது. மேலும் விழாவில் பங்கேற்கும் முக்கிய நபர்கள் யார் யார்? உள்ளிட்ட முழுமையான தகவலை காவல்துறை கேட்டுள்ளது.