லியோ வெற்றி விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு பட தயாரிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தின் வெற்றி விழா வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் தலைமையில் நடத்த தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ முடிவு செய்துள்ளது. இந்த விழாவில் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் லியோ என பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.