ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் மரணச் செய்தி உலகம் முழுவதும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இவரது மறைவுக்கு பிரபல நடிகை சமந்தா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் மரண செய்தியை கேட்டு மனமுடைந்து போனதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரை நினைவுகூர்ந்து புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு என்றென்றும் நண்பர்.. நன்றி எனவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.