தமிழ் சினிமாவில் கலந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த நிலையில் ஸ்ரீதிவ்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன், என் காதலனை கரம் பிடிப்பேன் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.