
தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு “தேர்தல் பத்திரங்கள் செல்லாது” என்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்கள் கைமாறு ஆதாயங்களுக்கு வழி வகுக்கும். கட்சிகளுக்கு யார் நன்கொடை தருகிறார்கள் என்பதை மக்கள் அறிவது அவசியம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.