ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானிய விநியோகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் நாளை முதல் இலவச பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.