இளம் வயதில் ஓடியாடி வேலை பார்த்து வயதான பிறகு களைத்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் நம்முடைய கையில் பணம் இருந்தால் நல்லது. எனவே இதற்கு ஏதாவது ஒரு முதலீடு திட்டத்தில் பணத்தை சேர்த்து வைத்தால் நல்லது. அந்த சமயத்தில் பென்ஷன் தொகை கையில் இருந்தால் நிதி சிக்கல்களை எதிர்கொள்ளலாம் . ஓய்வு காலத்தில் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு ஓய்வூதிய திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் பல ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த திட்டத்தில் ஒன்றுதான் எஸ்பிஐ ஸ்மார்ட் ஆன்யூட்டி  திட்டம். இந்த திட்டம் ஒரு பங்கேற்பு இல்லாத வருடாந்திர ஓய்வூதிய திட்டம். ஒத்திவைக்கப்பட்ட வருடம் குறைந்தபட்ச முதலீட்டு வயது 45 ஆண்டுகள் மற்றும் உடனடி திட்டத்திற்கான முதலீட்டு வயது 30 ஆண்டுகள் ஆகும். இதில் முதலீட்டாளர்கள் அரையாண்டு அல்லது ஆண்டு அல்லது மாதாந்திரமாக ஓய்வூதியம் வழங்கப்படும்.