இளம் வாக்காளர்கள் தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் எளிதில் அப்ளை செய்து கொள்ள முடியும். அதற்கு முதலில் voters.eci.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கான படிவம் 6 தேர்வு செய்து sign up செய்து mobile number & email என்பதை கொடுக்க வேண்டும். அதன் பிறகு புதிய வாக்காளருக்கு பதிவு செய்வதற்கான விருப்பத்தை தேர்வு செய்து புகைப்படம் மற்றும் ஆதார் , பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.