அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களை சந்தித்து சற்று நேரத்தில் செங்கோட்டையன் பேட்டி கொடுக்க இருக்கிறார். இந்த நிலையில் செங்கோட்டையனை வரவேற்க கோபி அலுவலகத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் அவர் திடீரென திறந்த வெளி வாகனத்தில் ரோட் ஷோ நடத்தினார்.
ஏற்கனவே கோபியில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்கிய அவர் பெரியார் புகைப்படத்தை இணைத்தார். மேலும் வழி நெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி சத்திய பாமா செங்கோட்டையனுடன் இணைந்துள்ளார். மேலும் அவர் என்ன பேட்டி கொடுக்கப் போகிறார் என்ன சொல்லப் போகிறார் என்பது இன்று தமிழக அரசியல் வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ள ஒரு விஷயமாக மாறி உள்ளது.
