திருப்பதி: திருப்பதிக்கு- ஹிசாரியிலிருந்து (Gisari) புறப்பட்ட ரயிலில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இரு பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புகை மண்டலமாக மாறிய அந்த பகுதியில் தீயின் தாக்கம் காரணமாக தீவிர பரபரப்பு நிலவுகிறது.

“>

 

தீவிபத்து ஏற்பட்ட சரியான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. அச்சுறுத்தலுக்கிடையே பயணிகள் வெளியேற்றப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பாக தெளிவான அறிக்கையை அதிகாரிகள் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சாலை அருகிலுள்ள பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்புடன் விலக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள்பீதி கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.