தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் யாருமே எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை பிடித்தது. தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியிலிருந்து பல கட்சிகள் வெளியேறி அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்த நிலையில் தற்போது மதிமுக கட்சியின் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. மதிமுக கட்சி திமுக கூட்டணியின் சார்பில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அந்த இரண்டு தொகுதிகளிலும் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
நேற்று நடைபெற்ற அதிமுக உயர்மட்ட பொதுக்குழுவில் மதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு பேருமே கலந்து கொள்ளாத நிலையில் தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளார். மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ராஜேந்திரன் என்பவர் கடையநல்லூர் தொகுதியிலும், செந்தில் செல்வம் என்பவர் சீர்காழி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் ஏற்கனவே செந்தில் செல்வம் மதிமுக கட்சியிலிருந்து விலகி விட்டதாகவும் திமுக கட்சியில் சேர இருப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
