திமுகவில் நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு, நெல்லை மாவட்டம் தற்போது நெல்லை கிழக்கு மற்றும் நெல்லை மேற்கு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை மேற்கு மாவட்டமாக அமையும் பகுதியில் அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும் நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கிரகாம்பெல் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் திமுக தலைமை இந்த புதிய மாவட்ட அமைப்பை உருவாக்கியுள்ளது.
இதனிடையே, நேற்று கோவை மாநகர மாவட்ட செயலாளராக இருந்த நபர் மாற்றப்பட்டதும் கட்சியினரிடையே கவனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
