தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று (மார்ச் 10) தைலாபுரம் தோட்டத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்த சசிகலா, இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்காத நிலையிலும், தனது அரசியல் நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் தவிர்த்து, ஒரு ‘மூன்றாவது மெகா கூட்டணியை’ உருவாக்குவது குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு | RAMADOSS | SASIKALA#Ramadoss | #PMK | #Sasikala | #TNElection | #Election2026 pic.twitter.com/M5adWx6DXX
— PttvOnlinenews (@PttvNewsX) March 10, 2026
“>
குறிப்பாக, வன்னியர் வாக்கு வங்கி மற்றும் டெல்டா மண்டலத்தின் செல்வாக்கை ஒன்றிணைத்து தேர்தலைச் சந்திப்பதற்கான வியூகம் குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் இந்தச் சந்திப்பில் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
