முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அளித்த பேட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் அவரது அதிருப்தி வெளிப்பட்டு வந்த நிலையில், அவர் கட்சியிலிருந்து விலகி திமுகவோ அல்லது தமிழக வெற்றிக் கழகமோ நோக்கிச் செல்லலாம் எனவும், ஒருபக்கம் நீக்கம் செய்யப்படலாம் எனவும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு கருத்துக்கள்  சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

ஆனால், தற்போது கிடைத்த தகவல்களின்படி, செங்கோட்டையன் எந்தவிதமான புதிய கட்சிக்கோ, எதிர்க்கட்சிக்கோ செல்ல வாய்ப்பே இல்லை என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெளிவாக தெரிவித்துள்ளன.

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து முக்கிய பொறுப்புகளில் இருந்த செங்கோட்டையன், கட்சியை உயிராக நேசிக்கும் நபராக உள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். திமுகவோ அல்லது தவெகவோ போன்ற எதிர்கட்சிகளின் கொள்கைகள், அவருடைய நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்பதால், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும், கட்சி மாறும் முடிவை எடுக்க மாட்டார் என்று உறுதியாக கூறப்படுகின்றது.

மேலும், திமுகவில் தற்போது செங்கோட்டையன் அங்கு செல்வது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு நிழலாக இருக்கும் என்பதாலேயே அவர் அந்த முடிவைத் தவிர்த்திருக்கிறார்.

இதற்கிடையில், செங்கோட்டையனை புதிய கட்சிகளுக்கு அழைத்துசெல்லும் முயற்சிகள் சில மூலமைகளில் இருந்து நடந்ததாக செய்திகள் வெளியானாலும், அவற்றில் எதையும் அவர் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. ஆகவே, செங்கோட்டையன் வருகிற செப்டம்பர் 5ம் தேதி நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்பில், “அதிமுக ஒருமித்த கட்சியாக செயல்பட வேண்டும், சின்ன விவகாரங்களால் ஆட்சிக்கு தடையாகக்கூடாது” என்ற கோணத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக அவரது நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் தனது பங்கையும் மரியாதையையும் பாதுகாத்து, அதே நேரத்தில் கட்சி ஒருங்கிணைவுக்காகவே போராடுகிற தலைவர் என்பதையே செங்கோட்டையன் நிரூபிக்கப் போகிறார். என்று தகவல் தெரிவிக்கின்றது ..