தமிழக வெற்றி கழகம் மீது இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இதுவரை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அனைவருமே ஆளுநர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் பாஜக தமிழ்நாட்டில் புகுந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய பிரேமலதா விஜயகாந்த் பர்சனல் ஜோசியருக்கு எதற்காக அரசு பதவி கொடுத்தீர்கள் என்று முதல்வர் விஜயிடம் நேரடியாக கேள்வி கேட்ட நிலையில் பட்டினம்பாக்கம் வீட்டிற்குள் முகத்தை மூடிக்கொண்டு சென்றது யார் என்றும் அதிரடியான ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ வன்னி அரசும் மூட நம்பிக்கைகளுக்கு அரசு மதிப்பு கொடுக்கக் கூடாது எனவும் இது தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் பாஜகவின் ஒரே ஒரு எம்எல்ஏவான போஜராஜன் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகிப்பதாக தெரிவித்தார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக தற்போது நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில் எஸ்.பி வேலுமணி தலைமையிலான அணி பாஜக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.
