தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், 26 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்துள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சி.வி.சண்முகம் தரப்பு, “தோல்விக்கு யார் பொறுப்பேற்கிறாரோ அவரே உண்மையான தலைவர்” என எடப்பாடியை நேரடியாக விமர்சித்துள்ளது.
மேலும், தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் அது கைகூடாமல் போனதாகவும் சி.வி.சண்முகம் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திமுக ஆதரவோடு அதிமுக ஆட்சி என்ற எடப்பாடியின் முடிவால் அனைவரும் அதிர்ந்து போயிருப்பதாகவும், தற்போது பாஜக உட்பட எந்தக் கூட்டணியிலும் அதிமுக இல்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
அடுத்த சில மணி நேரங்களில் அதிமுக தலைமையில் அதிரடி மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
