தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் முன்னாள் மேலாளர் பிடி செல்வகுமார் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுக கட்சியில் இணைந்துள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை புதிதாக தொடங்கிய நிலையில் 2026 தேர்தலில் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களிலும் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் நிலையில் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சலப்பை மக்கள் இயக்க தலைவருமான புலி படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் முன்னாள் மேளாளருமான பிடி செல்வகுமார் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். மேலும் அவர் இன்று தான் ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.